இயக்குநர் விக்னேஷ் சிவனுடனான, இல்வாழ்வின் புதிய தொடக்கத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தாஜ் கிளப் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறிய விக்னேஷ் சிவன், திரைக்கதை சொல்வதற்காக, நடிகை நயன்தாராவை முதன் முதலில் இங்கு தான் சந்தித்ததாக நினைவுகூர்ந்தார்.