விக்னேஷ் சிவன் – நயன்தாரா கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 திகதியன்று வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
இதில் பல நட்சத்திர நடிகர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஜோதிகா, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் மணிரத்தினம், கெளதம் மேனன் என பலர் கலந்து கொண்டனர்.
அதில் நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க இவர்களின் திருமணம் நடை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த் தன் தரப்பில் இருந்து, முப்பது சவரன் தங்க நகைகள் மணமக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கின்றார்.
மேலும் இந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நயன்தாராவுக்கு திருமண பரிசாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர வைடூரியம் மற்றும் மரகத நகைககளை விக்னேஷ் சிவன் கல்யாண பரிசாக வழங்கியதாக கூறப்படுகின்றது.