திருப்பதி மாடவீதியில் செருப்புடன் நடந்ததாக எழுந்த சர்ச்சை எழுந்தநிலையில், அது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார்.
சினிமா நட்சத்திரங்களான நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்கேஷ் சிவன் இடையிலான திருமணம் மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாரூக்கான உள்ளிட்ட பலரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த தம்பதியர் திருமணம் முடிந்த கையோடு தங்களது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய நேற்று திருப்பதிக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு இருவரும் மாடவீதி வழியாக நடந்து வந்தனர்.
அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களுடன் போட்டோ எடுக்க வந்த புகைப்படக் காரர்களும் காலில் செருப்புடன் நடந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இந்த செயலுக்காக மன்னிப்பு கோருகிறோம் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
அதில், திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டும் என விரும்பினோம், ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் திருமணம் நடந்தது. கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோயில் வளாகத்தில் போட்டோ எடுத்தபோது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை; 30 நாட்களில் 5 முறை திருப்பதிக்கு சென்றிருக்கிறோம்; தவறுக்காக உண்மையாக மன்னிப்பு கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.