திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக தனது கணவருடன் சேர்ந்து செய்தியாளர்களை நயன்தாரா சந்தித்தார்.
தாஜ் கிளப் ஹவுஸ் ஹொட்டலில் பத்திரிகையாளர்களுக்கு புதுமணத்தம்பதி மதிய விருந்து அளித்தனர்.
பின்னர் நயன்தாரா பேசுகையில், எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி மற்றும் இங்கு வந்தவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, இன்னும் எங்களுக்கு உங்களின் ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் தேவை, எல்லோருக்கும் நன்றி என பேசினார்.
விக்னேஷ் சிவன் பேசுகையில், நான் முதன் முதலில் இந்த ஹொட்டலில் தான் நயன்தாரவிடம் கதை சொல்வதற்காக அவரை சந்தித்தேன், இங்கு வைத்து நாங்கள் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இனியும் எங்களுக்கு உங்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் தேவை, இங்கு வந்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.