Married Women Google Search: உங்களுக்கு ஏதேனும் தகவல் அல்லது கேள்விக்கு பதில் வேண்டுமானால் முதலில் கூகுள் உலாவியை தான் நாடுவீர்கள். ஒரு நாளில் பலமுறை கூகுள் தேடுபொறி பயன்படுத்தப்படுகிறது.
இந்த தருணத்தில் கூகுளில் நீங்கள் தேடும் சிறிய விவரங்கள் கூட அதன் சர்வர் வரலாற்றில் சேமிக்கப்படும். இச்சூழலில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் பட்டியலும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும்.
தனித் தனி வகைகளாகப் பிரிக்கப்பட்டு, இந்த தேடுதல் குறித்த தகவல்களை சில ஆய்வு நிறுவனங்கள் வெளியிடுகிறது. இதனை அறிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் இப்போது, கூகுளில் திருமணமான பெண்கள் சரியாக என்ன தேடுகிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த முடிவை நீங்கள் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள். திருமணமான பெண்கள் கூகுளில் எதைத் தேடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
Haunted Mobile Number: இந்த மொபைல் நம்பர் வைத்திருந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை!
திருமணமான பெண்கள் கூகுளில் இவற்றை தேடுகிறார்கள்
கூகுள் தேடுபொறி தரவுகளின்படி, திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களை திருப்திப்படுத்துவது குறித்து தான் புதுப்பெண்கள் அதிகம் கூகுளில் தேடுகின்றனர் என்று கூறுகிறது ஆய்வு முடிவுகள்.
அவர்களின் விருப்பங்கள் என்ன? கணவனின் மனதை எப்படி வென்று அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகள் கூகுளிலும் அடிக்கடி தேடப்படுவதாக உள்ளன.
கணவனை எப்படி கையாள்வது என்று கூகுளில் தேடுவது இன்னும் ஆச்சரியம். தவிர, குடும்பக் கட்டுப்பாடு எப்போது செய்ய வேண்டும்? குழந்தை பிறக்க சரியான நேரம் எது? போன்ற கேள்விகளையும் திருமணமான பெண்கள் கூகுளில் தேடுகிறார்கள்.
Apple iPhone 12: ஐபோன் SE-ஐ விட விலை மலிவாக ஆப்பிள் ஐபோன் 12..!
குடும்ப பொறுப்புகள் குறித்த தேடல்!
மேற்கண்ட கேள்விகளுக்கு மேலதிகமாக, பெண்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு புதிய குடும்பத்திற்குச் செல்லும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிய விரும்புகிறார்கள்.
Google Maps: சுவாசிக்கும் காற்றின் தரத்தை அறிய கூகுள் மேப்ஸ்!
அந்தக் குடும்பத்தின் அங்கமாக இருப்பது எப்படி? குடும்பப் பொறுப்புகளை எப்படிக் கையாள்வது என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதைவிட முக்கியமாக, திருமணத்திற்குப் பிறகு வேலையை கையாள்வது எப்படி என்றும் கூகுளில் அதிகம் தேடுகிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு உங்கள் சொந்த தொழிலை எவ்வாறு நடத்துவது? குடும்பம் மற்றும் வணிகம் இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி நிர்வகிப்பது? இவையும் கூகுளில் பெண்கள் அதிகம் தேடுபவையாக உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
புதுப்பெண்கள் தேடிய சில வார்த்தைகள் கீழ்வருமாறு
What do married women look for?How to identify husband’s choice?How to win husband’s heart?How to join the new family?How to take responsibility of family with husband’s partner?When to decide the birth of a child?How to run your own business?How to hold husband in first?