திவாலாக போகும் Revlon.. இவ்வளவு கடனா..?

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும், விற்பனையிலும் ஒரு காலத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக இருந்த Revlon தற்போது அதீத கடன் சுமையால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

அமெரிக்க சந்தையில் டெக் நிறுவன பங்குகள் 25 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ள நிலையில் தற்போது அழகு சாதன பொருட்கள் நிறுவன திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.. இந்தியாவுக்கு பாதிப்பா..?!

Revlon நிறுவனம்

Revlon நிறுவனம்

அமெரிக்காவின் முன்னணி அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Revlon அடுத்த வாரத்திற்குள் நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்து தன்னை காத்துக்கொள்ள சேப்டர் 11 அறிக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தளமும் உறுதி செய்துள்ளது.

பங்குகள் வீழ்ச்சி

பங்குகள் வீழ்ச்சி

Revlon பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 52.76 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 2.05 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 82.42 சதவீதம் சரிந்து உள்ளது, இது Revlon முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

3.31 பில்லியன் டாலர் கடன்
 

3.31 பில்லியன் டாலர் கடன்

லிப்ஸ்டிக் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் Revlon நிறுவனம் திவாலாவதில் இருந்து காத்துக்கொள்ள கடன் பத்திரங்கள் முடியும் வேளையில் கடன் கொடுத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. Revlon நிறுவனம் சுமார் 3.31 பில்லியன் டாலர் அளவிலான நீண்ட கால கடன்களை வைத்துள்ளது.

கொரோனா

கொரோனா

கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்பி வரும் நிலையிலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் அலுவலகத்திற்கு செல்ல துவங்கியுள்ள நிலையில் அழகு சாதன பொருட்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது.

திவால்

திவால்

இந்த சூழ்நிலையில் Revlon நிறுவனம் சந்தையில் புதிதாக வந்துள்ள பிராண்டுகளின் டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் போட்டியை சமாளிக்க முடியாமல் வர்த்தகத்தை தொடர்ந்து இழந்து வருகிறது. இதன் நீட்சி தான் தற்போது அதிகப்படியான கடனும், திவாலாகும் நிலையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

USA Based Cosmetics maker Revlon nears bankruptcy prepares to file chapter 11 protection

USA Based Cosmetics maker Revlon nears bankruptcy prepares to file chapter 11 protection திவாலாக போகும் Revlon.. இவ்வளவு கடனா..?

Story first published: Saturday, June 11, 2022, 19:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.