தைவான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டால், அந்நாட்டின் மீது போர் தொடுக்க சீனா தயக்கம் காட்டாது என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்கி (Wei Fenghe) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினுடனான சந்திப்பின் போது, தைவான் மீதான நடவடிக்கைகளை சீனா தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, தைவான், சீனாவின் ஒரு பகுதி என்றும், அதனை பிரிக்க முற்பட்டால் அதன் முடிவு போராக இருக்கும் என சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.