நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை – புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு

பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவரான பிரணிதா சுபாஷ், அருள்நிதி நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘உதயன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’, ஜெய்-யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர், கடந்தாண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மிக எளிமையாக நடந்த இவர்களது திருமணம் சார்ந்த புகைப்படங்களை, தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார் நடிகை பிரணிதா சுபாஷ்.

image

திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்த படங்களில் நடித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரின் 34-வது பிறந்தநாளில் கடவுள் தங்களுக்க கொடுத்த வரம் என்று, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.

கடந்த மாதம் இவருக்கு எளிமையாக வளைகாப்பு நடந்த புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது பிரசவத்தை எளிமையாக்கிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி என்றும், உங்களுடன் எனது பிரசவம் குறித்த செய்தியை பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தை பிறந்த நடிகை பிரணிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.