ஈரானில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்காத ஆப்கான் நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து, அங்கு தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர்.
இதையடுத்து, தாலிபான்களின் கடந்த கால ஆட்சி முறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை குறித்த அச்சம் ஆப்கான் மக்கள் மத்தியில் உயரத் தொடங்கியதை அடுத்து, லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் அவர்களின் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயரத் தொடங்கினர்.
Iran has warned undocumented Afghan immigrants/refugees that they will all be deported unless they participate in the government’s ongoing census by June 22.@TOLOnews earlier reported that some Afghans are afraid of census as they’re worried they won’t be allowed extensions.
— Iran International English (@IranIntl_En) June 11, 2022
அந்தவகையில் ஆப்கானின் அண்டை நாடான ஈரானிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாக குடியேறினர்.
இந்தநிலையில், ஜூன் மாதம் முதல் ஈரான் அரசாங்கம் தங்களது மக்கள் தொகையை கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாக டோலோ நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானியர்கள் மக்கள் கணக்கெடுப்பிற்கு பயப்படுகிறார்கள் என்றும், அவர்களது குடியேற்றங்கள் குறித்த நீட்டிபை ஈரான் அரசு அனுமதிக்காதோ என்ற கவலையில் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆவுஸ்திரேலியாவை துவம்சம் செய்த தசுன் ஷனக: திரில் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
இந்நிலையில், ஆவணங்கள் இல்லாத ஆப்கானின் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் தற்போது நடைபெற்று வரும் ஈரானின் 2022ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்றால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.