நாமக்கல் மாவட்டத்தில் பின்னோக்கி வந்த கார் 2 வயது குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் நடுத்தெரு பகுதியே சேர்ந்தவர் கண்ணன். இவரது 2 வயது மகன் தருண் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவ்வழியாக வந்த கார், திருப்புவதற்காக டிரைவர் பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாக குழந்தை மீது கார் மோதி குழந்தை கீழே விழுந்துள்ளான்.
இதைத்தொடர்ந்து குழந்தை கீழே விழுந்ததைக் கவனிக்காமல் டிரைவர் மீண்டும் காரை இயக்கியதால் குழந்தை மீது மீண்டும் இரண்டு முறை கார் ஏறி இறங்கியதில் குழந்தை பலத்த காயமடைந்து உள்ளான்.
இதையடுத்து குழந்தையின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.