பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் மக்கள் விரோதமானது தொழில் விரோதமானது என்று நிராகரித்தார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.
பட்ஜெட்டில் பணவீக்கம் 11 புள்ளி 5 சதவீதம் என்றும் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் யதார்த்தத்திற்குப் புறம்பான கணிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் விமர்சனம் செய்தார்.
பணவீக்கம் 25 முதல் 30 சதவீதம் இருக்கும் என்ற SPI கணிப்பை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.