பிரித்தானியாவில் £4 பில்லியன் மதிப்பிலான தரமற்ற, குறையுள்ள கொரோனா கவசப் பொருள்களை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மின்சாரம் தயாரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்குகள், கவுன்கள் மற்றும் பிற உபகரணங்கள் எரிக்கப்படவுள்ளது.
எனினும், அரசின் செலவீனங்களைக் கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழுவான watchdog committee இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
Jon Super / Associated Press
இவ்வளவு பெரிய தொகை வீணாக்கப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள அந்தக் குழு, கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.
மேலும் அவ்வளவு பெரிய பணத்தை அரசாங்கம் எப்படி £4 பில்லியன் மதிப்பிலான தரமற்ற பொருளுக்கு செலவழித்தது என்பது குறித்து விசாரிக்கவுள்ளது.