வீக் எண்ட் நேரத்தில் வீட்டிலேயே இருந்து அலுத்துப் போனவர்களுக்கு குட்டி ட்ரிப் போகலாம்னு தோனுவது வழக்கம்தான். அதுவும் சாலை மார்க்கமா போகனும்னு நினைக்கிறவங்களுக்கு எப்படி போகலாம், எந்த வழியை பயன்படுத்தலாம் போன்ற குழப்பங்கள் எழும். அப்படியான குழப்பங்களை தீர்க்க எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
முதலில் பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு ரோட் ட்ரிப் போக எப்படி செல்லலாம் என்ற ப்ளானை கீழ்காணும் தகவல்கள் விவரிக்கும்.
பெங்களூருவில் இருந்து ஊட்டியை அடைய கிட்டத்தட்ட 280 கிலோமீட்டர் ஆகும். பஸ், ட்ரெய்னில் சென்றால் 8 முதல் 9 மணிநேரம் ஆகும்.
ஆனால், சாலை வழியாக காரிலோ அல்லது பைக்கில் சென்றால் 6 முதல் 6.30 மணிநேரத்திற்குள் சென்றுவிடலாம்.
காலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து பைக்கை முறுக்கத் தொடங்கினால் அடுத்த 40 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது 1.30 மணிநேரத்தில் Bidadi அடைந்ததும் அங்க ஒரு பிரேக். அந்த பிரேக்கில் சுட சுட பிரேக் பாஸ்டை முடித்துக்கொள்ளலாம்.
அதன் பிறகு 110 கிலோ மீட்டருக்கு தொடர்ந்து பயணித்தால் காலை 19.30 மணியளவில் மைசூரை அடையலாம். அங்கு, ஒரு மணிநேரம் ஹால்ட் போட்டு மைசூரை சுற்றிப் பார்க்கலாம்.
அதனையடுத்து 130 கிலோ மீட்டருக்கு பறக்கும் ராசாளியேனு போகலாம். வழியில பந்திப்பூரை 12.30 வாக்கில் அடைந்து அங்கு வண்ண வண்ண மயில்கள், ஆங்காங்கே சுற்றித்திரியும் யானை, மான்களை கண்டு ரசித்துவிட்டு (அவர்களை தொந்தரவு செய்யாமல்) செல்லலாம்.
போகும் வழியில் கல்ஹட்டி ஃபால்ஸ் வரும். அங்கு அருவியை பார்த்துவிட்டு அதன் பிறகு 30 கிலோ மீட்டருக்கு பாதுகாப்பாக ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் போதும் 3 மணி பொழுதில் ஊட்டியை அடையலாம்.
பயணத்தின் போது இடையில் இவற்றை எதையுமே காணாமல் எனக்கு நேராக ஊட்டிக்கு சென்றால் போதும் என நினைப்பவர்கள் தாராளமாக பகல் 1 மணிக்கே டெஸ்டினேஷனை அடைந்துவிடலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM