மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பலத்த காற்றால் அங்கு பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடந்த 24 மணிநேரத்தில் தானே மாவட்டத்தில் மட்டும் 6 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள மஜ்ஜிவாடா என்ற இடத்தில் டெம்போ ஒன்றின் மீது மரம் வேரோடு சாய்ந்தது.