புதுக்கோட்டை: தென் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரள்வதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மாநிலங்களை எம்.பி எம்.எம்.அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
“தமிழகத்தில் உள்ள பழநி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நடைபெறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பெரும்பாலும் மக்கள் பொதுபோக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.
ஆகையால், பழநி வழியாக மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்செந்தூர் வழியாக பழநியில் இருந்து திண்டுக்கல், திருச்செந்தூர் வழியாக செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
மேலும், பழநி வழியாக செங்கோட்டையில் இருந்து மதுரை, பழநி மற்றும் புதுக்கோட்டை வழியாக காரைக்குடியில் இருந்து திருச்சிக்கும், திருச்செந்தூர், புதுக்கோட்டை வழியாக திருச்சியில் இருந்து காரைக்குடிக்கம் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.