இந்தியாவில் குறைவான வட்டி விகித காலம் ஆர்பிஐ-யின் 2 முறை வட்டி உயர்வு மூலம் அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டு.
பணவீக்கம், நாணய மதிப்பு சரிவை கட்டுப்படுத்த இந்தியா உட்பட பல முன்னணி நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தி வருகிறது.
ஆர்பிஐ வங்கியின் வட்டி உயர்வு இந்தியாவின் பெரும் பணக்காரர்களுக்கும், பெரிய வர்த்தக குழுமங்களுக்கும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
பிரபல வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ: இனி பணம் போடவும் முடியாது, எடுக்கவும் முடியாது!
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்ந்தது மூலம் முதலில் பாதிக்கப்படுவது வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் தான். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் அதிகப்படியான கடனில் மூழ்கியுள்ளது இந்த வட்டி விகித உயர்வால் பெரு நிறுவனங்கள் செலுத்தும் வட்டி விகிதமும் உயரும் என்பதால் லாபத்தில் பெரிய துண்டு விழும்.
ரெப்போ விகிதம்
கடந்த 4 வருடங்களாக ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை மாற்றாமல் தொடர்ந்து குறைவான அளவிலேயே வைத்திருந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் வாயிலாகக் கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம் பெரிய அளவில் உயர்ந்தது.
பெரு நிறுவனங்கள்
இந்தியாவில் குறைவான கடன்களை கொண்ட பெரு நிறுவனங்களுக்கு இது சாதகமாக இருந்தாலும், அதிக கடன் வைத்திருக்கும் ஒரு காரணத்தாலேயே லாபத்தின் பெரும் பங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுசூகி, டிவிஎஸ் மோட்டார்ஸ், பேயர் கார்ப்சையின்ஸ், பாரத் எல்கட்ரானிக்ஸ் என பல பெரிய நிறுவனங்கள் குறைவான கடனில் தான் உள்ளது.
அம்பானி, அதானி, டாடா
டாடா குழுமத்தின் மொத்த கடன் அளவு 2,89,080 கோடி ரூபாய், இதை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2,66,305 கோடி ரூபாய், ஆதித்ய பிர்லா குழுமம் 2,29,857 கோடி ரூபாய், அதானி குழுமம் 2,18,271 கோடி ரூபாய், எல் அண்ட் டி 1,62,792 கோடி ரூபாய், மஹிந்திரா குழுமம் 74,667 கோடி ரூபாய், பஜாஜ் குழுமம் 61,253 கோடி ரூபாய். இதன் மூலம் டாப் 7 நிறுவனங்களின் மொத்தம் கடன் மட்டுமே 13,02,225 கோடி ரூபாய்.
ஐடி நிறுவனங்கள்
இதில் முக்கியமாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் குறைவான அல்லது ஜீரோ கடன் வைத்துள்ளது. இதேபோல் இன்பராஸ்டர்க்சர் மற்றும் அதிக மூலதனம் தேவைப்படும் துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் அதிகப்படியான கடன்களை வைத்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகள் தீர்வு
ஆர்பிஐ அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளும் கடனுக்கான வட்டியை உயர்த்தும் நிலையில் பெரும் நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து கடன் வாங்க திட்டமிடும். ECB வாயிலாக இந்திய நிறுவனங்கள் பெறும் கடனில் 5 டாலரில் ஒரு டாலர் அம்பானியும், அதானி குழுமங்கள் பெரும் நிலையில் தற்போது பிற நிறுவனங்களும் வெளிநாட்டுக் கடனை பெற முயற்சி செய்யும்.
Tata, Ambani, Adani, Birla struck with huge debts after RBI repo rate hike
Tata, Ambani, Adani, Birla struck with huge debts after RBI repo rate hike ரிசர்வ் வங்கி வட்டி உயர்வால் கலங்கி நிற்கும் அம்பானி, அதானி, டாடா.. ஏன்..?