ரூ.38, 600 கோடி மதிப்பு மாஸ்க், PPE உபகரணங்களை தீயிட்டு எரிக்கும் பிரிட்டன்: என்ன காரணம்?

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக மாஸ்க் என்றால் என்னவென்றே தெரியாத பலர், மாஸ்க் அணிய ஆரம்பித்தனர். மேலும் வீட்டில் டஜன் கணக்கில் மாஸ்குகளை வாங்கி வைத்தனர்.

அதேபோல் பல நாடுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து மாஸ்குகளை வாங்கி தங்கள் நாட்டின் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தன.

30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா.. ஏழைகளின் நிலை?

கொரோனா கவச உபகரணங்கள்

கொரோனா கவச உபகரணங்கள்

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மாஸ்குகள் மற்றும் கொரோனா தொடர்பான PPE உபகரணங்கள் உள்பட பல பொருட்கள் தேவை இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.38,000 கோடி

ரூ.38,000 கோடி

அந்த வகையில் இங்கிலாந்து அரசு ஏற்கனவே கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது கொள்முதல் செய்து இந்த 400 கோடி பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 38,600 கோடி மதிப்பிலான கொரோனா கவச பொருட்கள் வீணாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

மின்சார தயாரிப்பு
 

மின்சார தயாரிப்பு

இந்த பொருட்களை எரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த குழு, அவசரகதியில் தரமற்ற கொரோனா கவசப்பொருட்களை அரசு வாங்கி உள்ளதாகவும் இதனால் பெரிய தொகை வீணடிக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் முக கவசம் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சம் ஏற்படும் என்றும் அந்த குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புகையில் வீண்

புகையில் வீண்

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங்கின் தலைமை நிர்வாகி பாட் கல்லன் அவர்கள் கூறியபோது, ‘அரசாங்கம் “பில்லியன் கணக்கான பவுண்டுகளை புகையில் வீணாக்குகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

அரசு விளக்கம்

அரசு விளக்கம்

ஆனால் அரசு இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, ‘4 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள உபகரணங்கள் அனைத்தும் எரிக்கப்படாது என்றும், சுமார் 670 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள PPE எந்த சூழலிலும் பயன்படுத்த முடியாதது என்று சுகாதாரத் துறை கூறியதால் அதை மட்டும் எரிக்க இருப்பதாகவும், மற்ற பொருட்களை மருத்துவர்களின் பயன்பாட்டுக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், மேலும் தொண்டு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து அமைச்சர்

இங்கிலாந்து அமைச்சர்

தொற்றுநோய்களின் ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தது என்றும், இந்த தவறுகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு அரசு செயல்படும் என்றும் இங்கிலாந்து அமைச்சர் ராபின் வாக்கர் அவர்கள் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

U.K. plans to burn billions in wasted COVID-19 pandemic protective gear

U.K. plans to burn billions in wasted COVID-19 pandemic protective gear | ரூ.38, 600 கோடி மதிப்பு மாஸ்க், PPE உபகரணங்களை தீயிட்டு எரிக்கும் பிரிட்டன்: என்ன காரணம்?

Story first published: Saturday, June 11, 2022, 12:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.