சென்னை: வணிகவரி, பதிவுத்துறையில் கடந்தாண்டு ரூ.13,000 கோடி வருவாய் ஈட்டித் தந்துள்ளோம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். வணிகவரி, பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.50,000 கோடியாக வருவாய் அதிகரிக்க முயற்சி செய்துள்ளோம். ரூ.50,000 கோடி வருவாய் கிடைத்தால் ஒன்றிய அரசின் தயவின்றி சொந்தக்காலில் மாநிலஅரசு நிற்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.