வருமான வரித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், Huawei இந்தியா தொலைத்தொடர்பு உயர் அதிகாரிகள், சி.இ.ஓ Li Xiongwei மற்றும் மூன்று பேருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Huawei வருமான வரித்துறையின் வழக்குகளில் வரித்துறையினரால் கேட்கப்பட்ட தகவல்களைத் தடுத்து நிறுத்தியதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சீன பன்னாட்டு நிறுவனம், பாதுகாப்புக் காரணங்களுக்காக பல நாடுகளில் ஸ்கேனரின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் தேடுதல் நடவடிக்கைகளை முடக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டேர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன? ஏன் அவசியம் எடுக்க வேண்டும்?
வருமான வரித்துறை
மேலும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 278-B உடன் படிக்கப்படும் பிரிவு 275-B இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக நிறுவனம் மற்றும் நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைப்பதற்கு போதுமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Huawei இந்தியா
இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன், நீதிமன்றம் Huawei அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்த நிலையில் இந்நிறுவனம் வேண்டுமென்றே புலனாய்வாளர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளது என்பது அறிக்கைகள் மற்றும் பிற இணைக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கணக்கு புத்தகங்கள்
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்களை தர மறுப்பதற்காகவும், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியை குழப்ப முயன்றதாகவும் தெரிகிறது என்றும், தரவு மற்றும் தகவல்களை வழங்குவதற்கு நியாயமற்ற முறையில் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது
சம்மன்
இதனையடுத்து தலைமை நிர்வாக அதிகாரியைத் தவிர, துணை தலைமை நிதி அதிகாரி சந்தீப் பாட்டியா, வரித் தலைவர் அமித் துக்கல் மற்றும் லாங் செங் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
Huawei India CEO Li, 3 others summoned by Delhi Court in tax case
Huawei India CEO Li, 3 others summoned by Delhi Court in tax case | வருமான வரி வழக்கு: Huawei இந்தியா சி.இ.ஓவுக்கு சம்மன்!