மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவுவது பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, மனிதர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் வீட்டு விலங்குகளான நாய், பூனை உள்ளிட்டவற்றுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனாலும், மனிதர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு அளவுக்கு விலங்குகளுக்கு இந்த தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை எனவும், மிகவும் அரிதாகவே சில விலங்குகள் மட்டும் பாதிப்புக்கு ஆளாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், விலங்குகளுக்கு செலுத்தக்கூடிய ‘அனோகோவாக்ஸ்’ என்ற
கொரோனா தடுப்பூசி
தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவை சேர்ந்த இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசி, ‘டெல்டா, ஒமைக்ரான்’ வகை வைரஸ் தொற்றில் இருந்து விலங்குகளை பாதுகாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.