நார்வே நாட்டின் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வே நாட்டில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு#Chennai #MKStalin #Praggnanandhaa #TNGovt #MKStalin #Chennai #TamilNadu #TamilNews #Seithipunal pic.twitter.com/eOSRPoMxqv
— Seithi Punal (@seithipunal) June 11, 2022
வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.