அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ள வேளையில், பெடரல் ரிசர்வ் வட்டியை எவ்வளவு அதிகரிக்கும் என்பது உறுதியாகத் தெரியாமல் இருக்கும் வேளையில், இந்தியாவைக் கச்சா எண்ணெய் விலை பயமுறுத்துகிறது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை 10 வருட உச்சத்தை எட்டியுள்ளது, இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
24 மாநிலங்களில் 70,000 பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று போராட்டம்: ரீடெயில் விற்பனை பாதிக்குமா?
இந்தியா
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை 90 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகப் பூர்த்தி செய்யும் நிலையில், விலை சுமையைக் குறைக்கவும் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும், பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது.
கச்சா எண்ணெய்
அப்படி இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் பேஸ்கட் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது 10 வருட உச்ச விலையான 121 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 121.28 டாலராக உள்ளது.
பிப்ரவரி / மார்ச் 2012 விலை
மத்திய எண்ணெய் வள துறை அமைச்சகத்தின் பெட்ரோலியம் பிளானிங் மற்றும் அனலிசிஸ் செல் அமைப்பின் தரவுகளை ஒப்பிடுகையில் இந்த 121.28 டாலர் விலை என்பது பிப்ரவரி / மார்ச் 2012 விலையாகும். இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 120.7 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 122.0 டாலர்.
சீனா
வெள்ளிக்கிழமை சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் காரணத்தால் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து இன்று காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 0.69 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் லாக்டவுன்
சீனாவின் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரங்களில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சீனாவின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுச் சப்ளை செயின் பாதிப்பு ஏற்படும், இதன் வாயிலாக விலைவாசி உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
அமெரிக்கா பெடரல் ரிசர்வ்
இதற்கிடையில் அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால் டாலர் ஆதிக்கம் அதிகரித்து ரூபாய் மதிப்பு சரியும், இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் கூடுதலான பணத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். ஆனால் ரஷ்யாவின் டிஸ்கவுன்ட் கச்சா எண்ணெய் இந்தியாவுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும்.
பெட்ரோல், டீசல் விலை
இதன் வாயிலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த உறுதுணையாக இருந்த வட்டி விகித உயர்வு ரூபாய் மதிப்பு மேம்பாட்டிற்காக உயர்த்தப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை சலுகை கட்டாயம் தேவைப்படுகிறது.
India’s crude oil basket price hits 10-year high 121.28 dollar; Does petrol diesel price will be hike
India’s crude oil basket price hits 10-year high 121.28 dollar; Does petrol diesel price will be hike 10 வருட உச்சத்தில் இந்திய கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை உயர்வது எப்போது..?!