11-06-2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8329 பேருக்கு கொரோனா பாதிப்பு 10 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8329 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், தொற்று பாதிப்பு காரணமாக 10 பேர் பலியாகி உள்ளனர்.  இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றை விட இன்று கூடுதலாக தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று  புதிதாக மேலும் 8329 பேர் கொரோனாவால்  பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,213,435 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 10 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,757 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 4,216 பேர் தொற்றின் பிடியில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42,648,308 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.69% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்,  40,370 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.09% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,08,406 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,94,92,71,111 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.