3 கொரோனா அலைகளை சந்தித்த இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருவதாக அமெரிக்க நிதித்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2020ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் குறைந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியதுடன் எட்டு சதவித வளர்ச்சியை அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தியதும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றியதாக அமெரிக்கா கூறியுள்ளது.