ரஷ்யாவை விட்டு அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் தற்போது அமெரிக்காவின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இதோடு சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவை விட்டு வெளியேறிய மெக்டொனால்டு புதிய பெயர், லோகோ உடன் வர்த்தகத்திற்குள் இறங்கியுள்ளது.
வருமான வரி வழக்கு: Huawei இந்தியா சி.இ.ஓவுக்கு சம்மன்!
விளாடிமீர் புடின்
விளாடிமீர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசு பல எதிர்ப்புகளைத் தாண்டி உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என 10க்கும் அதிகமான நாடுகள் ரஷ்யா உடனான வர்த்தகத் தொடர்பை மொத்தமாகத் தடை செய்தது.
வெளியேற முடிவு
இதனால் ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் தனித்துவிடப்பட்டது, இதனால் வேறு வழியே இல்லாமல் மொத்தமாக வெளியேற முடிவு செய்து ஒவ்வொரு நிறுவனமாக வெளியேறி வருகிறது.
மைக்ரோசாப்ட்
இதன் அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்து, தனது வர்த்தகத்தையும், சேவைகளையும் படிப்படியாக நிறுத்தி வந்தது. இதன் வாயிலாக ரஷ்யாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட்-ம் இணைந்துள்ளது.
400 ஊழியர்கள் பணிநீக்கம்
மைக்ரோசாப்ட் வெளியேறும் காரணத்தால் ரஷ்ய வர்த்தகத்தில் பணியாற்றி வந்த 400க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். ரஷ்யாவில் கூகுள், ஆப்பிள், நைக், டெல், ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்டு எனப் பல அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறியுள்ளது.
மெக்டொனால்டு
ரஷ்யாவை விட்டு மெக்டொனால்டு வெளியேறிய நிலையில், இந்த வர்த்தகத்தை ரஷ்ய தொழிலதிபரான அலெக்சாண்டர் கோவர் விளாடிமீர் புடின் அரசின் உதவியுடன் வெளியிடப்படாத தொகைக்கு வாங்கினார். இந்நிலையில் அலெக்சாண்டர் கோவர் தலைமையிலான வர்த்தகத்திற்குப் பெயர் முடிவு செய்யப்படாத நிலையில் லோகோ மட்டும் வெளியிடப்பட்டு உள்ளது.
Microsoft layoff 400 employees, Rebranded McDonald’s logo unveiled in Russia
Microsoft layoff 400 employees, Rebranded McDonald’s logo unveil in Russia 400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்.. McD-க்கு புதிய லோகோ..! #Russia