எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டபோது அதை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் முண்டியடித்துக்கொண்டு வாங்கினார்கள்.
நம்பகமான நிறுவனமான எல்ஐசியில் முதலீடு செய்தால் கண்டிப்பாக நியாயமான லாபம் கிடைக்கும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்போதே பொருளாதார நிபுணர்கள் சிலர் எல்ஐசி பங்குகளை வாங்க வேண்டாம் என்றும் அதில் மிகப்பெரிய நஷ்டம்தான் ஏற்படும் என்றும் எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி ஏராளமான பங்குகள் பொதுமக்களால் வாங்கப்பட்டது.
ரூ.1 லட்சம் கோடி இழப்பு.. எல்ஐசி முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
எல்.ஐ.சி பங்குகள்
இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் இருந்தே சரிந்து கொண்டே வருவது எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரூபாய் 949 என்ற விலையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி பங்குகள் தற்போது 25 சதவீதத்தை இழந்து நேற்றைய வர்த்தக முடிவில் போது ரூ.709 என்று சரிந்துள்ளது.
நஷ்டம்
எல்ஐசி ரூபாய் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை சந்தையில் பட்டியலிட்ட நிலையில் தற்போது அதன் மதிப்பு 4.6 லட்சம் கோடி சரிந்துள்ளது. சுமார் 25% நஷ்டம் ஆகி விட்ட நிலையில் இந்த நஷ்டத்தில் மதிப்பு எவ்வளவு என்றால் டாட்டா மோட்டார்ஸ் போன்ற ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை மொத்த விலை கொடுத்து வாங்குவதற்கு எவ்வளவு பணம் தேவையோ அந்த அளவுக்கு எல்.ஐ.சி பங்குகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதால் நஷ்டத்தின் அளவு எவ்வளவு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
ரூ.500க்கு வருமா?
இன்னும் ஒருசில நாட்களில் எல்ஐசி பங்குகள் ரூ.700 ரூபாய்க்கும் குறைவாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை இப்போது வாங்கலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் பொருளாதார நிபுணர்களின் அறிவுரை என்ன என்றால் இன்னும் எல்ஐசியின் பங்குகள் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிலையற்ற தன்மையில் இருந்தால் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த பங்கின் விலை 500 ரூபாய்க்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
பொருளாதார நிபுணர்கள்
அவ்வாறு எல்ஐசி பங்குகளின் மதிப்பு 500 ரூபாய்க்கு வந்தால் அப்போது வாங்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் இப்போது கண்டிப்பாக அந்த பங்கை வாங்க வேண்டாம் என்றுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
காத்திருப்பு
ஏற்கனவே இந்த பங்கை வாங்கியவர்கள் இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் அந்த பங்கை நஷ்டத்துடன் விற்றுவிட்டு வெளியே வந்து விடலாம் என்றும் இந்த பங்கை வைத்து கொண்டு காத்திருப்பதால் எந்தவித லாபமும் இருக்காது என்றே ஒரு சில பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
LIC’s losing streak extends to ninth day: When we buy?
LIC’s losing streak extends to ninth day: When we buy? | 500 ரூபாய் வரை இறங்குமா எல்.ஐ.சி பங்குகள்? எப்போது வாங்கலாம்?