Apple iPhone 12: ஐபோன் SE-ஐ விட விலை மலிவாக ஆப்பிள் ஐபோன் 12..!

Apple iPhone 12: ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்த ஆசையை நிவர்த்தி செய்ய அமேசான் மழைகால சிறப்பு சலுகை தினத்தை (Amazon Monsoon Carnival Sale) அறிவித்துள்ளது.

இந்த தினங்களில் ஐபோனை அதிரடி சலுகையில் வாங்கலாம். பொதுவாக ஐபோன் மினி மாடல்கள் அல்லது ஐபோன் எஸ்இ மாடல்கள் தான் விலை மலிவாக இருக்கும் என்று பயனர்கள் நினைத்திருப்பர். ஆனால், இங்கு ஐபோன் 12 விலை மலிவாகக் கிடைக்கிறது.

அமேசான் சலுகை தினத்தின் ஐபோனை எப்படி குறைந்த விலைக்கு வாங்குவது என்று பார்க்கலாம். இதில் வங்கி சலுகைகள் உள்பட, சுலப மாதத் தவணை திட்டங்கள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன.

Haunted Mobile Number: இந்த மொபைல் நம்பர் வைத்திருந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை!

ஐபோன் 12 விலை (iPhone 12 price in india)

Amazon Monsoon Carnival பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களில் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. குறிப்பாக ஐபோன் ரசிகர்களுக்கு இந்த சலுகை தினங்கள் பொன்னான வாய்ப்பை அள்ளித் தருகிறது.

இந்த சலுகை தினத்தில் ஆப்பிள் ஐபோன் 12 போனை ஐபோன் எஸ்இ விலையில் வாங்க வாய்ப்பு உள்ளது. ஜூன் 12 வரை விற்பனை தொடரும் என்று அமேசான் அறிவித்துள்ளது.

64ஜிபி வேரியண்ட் ஐபோன் 12 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.65,900 ஆகும். தற்போது அமேசானில் 17 விழுக்காடு தள்ளுபடியில் ரூ.54,900 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 சலுகைகள் (Apple iPhone 12 Offers)

ஐபோன் 12 ஆனது அமேசான் மான்சூன் கார்னிவல் தினங்களில் நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ரூ.9,500 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்தினால், போனின் விலை ரூ.45,400 ஆக இருக்கும். ஐபோன் எஸ்இ போனின் அடிப்படை விலை ரூ.43,900 ஆக உள்ளது. எனவே, புதிய iPhone SE 3 போனின் விலையில், திறன்வாய்ந்த ஐபோன் 12 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

iOS 16: இனி ஆப்பிள் போனில் இதையும் பார்க்கலாம்!

ஆப்பிள் ஐபோன் 12 அம்சங்கள் (Apple iPhone 12 Specifications)

ஐபோன் 12 போனில், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே உள்ளது. இது செராமிக் ஷீல்டு பாதுகாப்புடன் வருகிறது. இது சக்திவாய்ந்த A14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக அதிக தெளிவுதிறன் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 12 மெகாபிக்சல் வைட் சென்சார் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்டிருக்கிறது.

iOS 16: காசில்லாம ஆப்பிள் ஐபோன் வாங்கிக்கலாம்!

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டென்ட் சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், 5ஜி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற இணைப்பு ஆதரவுகளையும் ஐபோன் 12 பெறுகிறது.

Apple-iPhone-12 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Apple A14 Bionicசேமிப்பகம்64 GBகேமரா12 MP + 12 MPஇந்திய விலை79900டிஸ்பிளே6.1 inches (15.49 cm)முழு அம்சங்கள்
Apple-iPhone-12Apple iPhone 12 128GBApple iPhone 12 256GB

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.