Cryptocurrency: வெப்3, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே தற்போது சைபர் குற்றவாளிகளும் பெரும் மோசடியில் ஈடுபடுவது தீவிரமாகியுள்ளது.
அறிக்கைகளின்படி, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் மோசடிகளில் சுமார் ரூ. 7,775 கோடியை இழந்துள்ளனர். இதுவரை 46,000 பேர் கிரிப்டோகரன்சி மோசடியில் சிக்கியுள்ளனர்.
eSIM: இப்போது ஐபோன் இ-சிம் கார்டை ப்ளூடூத் வழியாக மாற்றலாம் – எளிய வழிகள் இங்கே!
FTC ஆய்வறிக்கை
ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) கடந்த வாரம் இதை அறிவித்தது. மோசடிகளில் பணத்தை இழப்பவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் விளம்பரம் மற்றும் சமூக ஊடக செய்திகளினால் நிகழ்ந்தது என்று கூறுகின்றனர்.
Common Passwords: மிகவும் ஆபத்தான 50 பாஸ்வேர்டுகள் – யார் வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம்!
கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சிகளின் புகழ் உச்சத்தைத் தொட்டது. உலகெங்கிலும் உள்ள மக்கள் டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு செய்தார்கள். குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டி தரும் பொருளாக கிரிப்டோகரன்சி இருந்தது.
பிட்காயின் புகழ்
கடந்த ஆண்டு பிட்காயினின் புகழ் மூலை முடுக்குகள் வரை ஒலித்தது. இதில் பலர் முதலீடு செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளில் மோசடி செய்வதில் கிரிப்டோகரன்சி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rummy Online: மக்களுக்கு பொறி வைக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள்!
FTC அறிக்கையின்படி, கிரிப்டோகரன்சி உள்ள ஒருவர் சராசரியாக 2,600 அமெரிக்க டாலர்களை (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 2000) இழந்துள்ளார். பிட்காயின், டெதர், ஈதர் ஆகிய கிரிப்டோகரன்சிகளில் தான் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
போலி கிரிப்டோகரன்சி
இந்த ஆண்டு மே மாதம், Dogecoin இணை நிறுவனர் பில்லி மார்கஸ் 95% கிரிப்டோகரன்சி தயாரிப்புகள் மோசடிகள் என்று அழைத்தார். இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு FTC அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
இதற்கிடையில், கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் பிட்காயின் விலை உச்சத்தை எட்டியது. பிட்காயின் மதிப்பு 69,000 அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 53.6 லட்சம்) ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.23.41 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.