Haunted Mobile Number: சிலர் நல்லது கெட்டதை நம்புகிறார்கள். சிலர் அவற்றை நம்புவதில்லை. ஆனால், உலகில் இன்னும் அமானுஷ்ய விஷயங்களை நம்புகிறவர்கள் அதிகளவில் உள்ளனர்.
சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பான விவாதம் ஒன்று நடந்து வருகிறது. மக்கள் விஐபி மொபைல் எண் வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்.
Nothing Phone 1: போன்களின் புதிய நாயகன் நத்திங் போன் 1 அவதாரம் ஜூலை 12 முதல்…!
ஆனால், தற்போது ஒரு விஐபி மொபைல் எண்ணை பேய் எண் என்று கூறி இணையத்தில் பரப்பரப்பாக விவாதங்கள் நடந்து வருகிறது. இது விஐபி மொபைல் எண் போல் தெரிகிறது. ஆனால், இந்த மொபைல் எண்ணை வாங்கியவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
மரணத்திற்கான காரணம் என்ன? இது புரியாத புதிராக இருந்தாலும், இந்த எண்ணை வாங்கியவரின் மரணத்தால் இந்த மொபைல் எண் பேய் எண்ணாகக் கருதப்படுகிறது.
Indian Railways: இனி ரயிலில் நிம்மதியாகத் தூங்கலாம் – இந்தியன் ரயில்வே உங்களை எழுப்பி விடும்..!
உலகின் மிக மோசமான மொபைல் எண்
உலகில் இப்படி ஒரு மொபைல் எண் உள்ளது. இந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தியவர் இறந்துவிட்டார். இந்த மொபைல் எண் பல்கேரியாவைச் சேர்ந்தது. இது கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Cryptocurrency: 46,000 பேரிடம் ரூ.7000 கோடிக்கு மேல் மோசடி – கண்ணாம் பூச்சி விளையாடிய ஹேக்கர்ஸ்!
இதுவரை இந்த மொபைல் எண் மூன்று பேருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அவர்கள் மூவரும் உயிரிழந்தனர். எனவே, இந்த மொபைல் எண் கெட்ட ஆவி குடியிருக்கும் எண்ணாகக் கருதப்படுகிறது. இது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
Rummy Online: மக்களுக்கு பொறி வைக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள்!
மொபைல் எண் என்ன?
தனியார் செய்தி ஊடங்கள் அளித்த தகவல்களின்படி, இந்த அச்சுறுத்தும் மொபைல் எண் ஒரு விஐபி எண். இந்த எண்ணைப் பார்த்து பலரும் இதை வாங்க ஆசைப்படுகிறார்கள். ‘0888888888’ என்ற கைப்பேசி இலக்கமானது மொபிடெல்லின் CEO ஆல் முதலில் வாங்கப்பட்டது.
eSIM: இப்போது ஐபோன் இ-சிம் கார்டை ப்ளூடூத் வழியாக மாற்றலாம் – எளிய வழிகள் இங்கே!
வாங்கிய சில நாட்களில் அவர் புற்றுநோயால் இறந்தார். அவரது மரணம் புற்றுநோயால் ஏற்படவில்லை என்றும் வேறு சில காரணங்களால் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த மொபைல் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று சிலர் கூறினர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
அவர்களின் கூற்று உண்மையோ பொய்யோ, ஆனால், இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேர் மொபைல் எண்ணை வாங்கியுள்ளனர். அவர்களும் இறந்ததால் இந்த மொபைல் எண் அரக்கனின் எண் என்று சமூக வலைத்தளவாசிகளால் கூறப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் கதை வேறு!
நாட்டில் உள்ள Just Dial எனும் நிறுவனத்தின் சேவை உதவி எண் 08888888888 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இன்னும் இதுபோன்ற எண்களுடன் இருக்கும் நம்பர்களில் மர்மங்கள் இருப்பதாக எந்த தகவலும் இல்லை.