HDFC வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறீர்களா? எவ்வளவு அதிகம் கட்ட வேண்டும் தெரியுமா?

HDFC தனது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை நான்காவது முறையாக உயர்த்தியுள்ளது. ஜூன் 9 அன்று, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் என அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஜூன் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று HDFC அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒரு அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத புள்ளியில் நூறில் ஒரு பங்கு என்பதால் HDFC வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.55% முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விளம்பரங்களுக்கு தடை.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு..!

HDFC வீட்டுக் கடன்

HDFC வீட்டுக் கடன்

HDFC வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மே மாதம் முதல் உயர்த்தப்பட்ட நிலையில்

சமீபத்திய உயர்வு என்பது ஒரு மாதத்தில் நான்காவது முறையாகும். மே 2 ஆம் தேதி 5 அடிப்படை புள்ளிகளும், மே 9ஆம் தேதி 30 அடிப்படை புள்ளிகளும் உயர்த்திய நிலையில் ஜூன் 1 அன்றும் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

சமீபத்திய வட்டி அதிகரிப்பு என்பது, சிறப்பு வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் 800க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ள கடனாளிக்கான குறைந்தபட்ச விகிதம் இப்போது 7.55% ஆக உள்ளது.

கடன் பெறுபவர்கள்
 

கடன் பெறுபவர்கள்

30 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.70 சதவீதமாக இருக்கும் என்றும், ரூ.30 முதல் ரூ.75 லட்சத்துக்கு மேல் உள்ள கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.95 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு தள்ளுபடி

பெண்களுக்கு தள்ளுபடி

அதேபோல் ரூ.75 லட்சத்துக்கு மேல் உள்ள கடனுக்கான வட்டி விகிதம் 8.05 சதவீதம் என்றும், பெண்களுக்கு வட்டி விகிதம் இந்தக் கடன்களில் 0.05% தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய EMI எவ்வளவு?

புதிய EMI எவ்வளவு?

கடனாளிகள் தங்கள் கடனுக்கான அதிக வட்டி விகிதங்களை அவர்களின் ரீசெட் தேதி வந்தவுடன் செலுத்த வேண்டும். உங்களிடம் HDFC வீட்டுக் கடன் இருந்தால், சமீபத்திய வட்டி விகித உயர்வுக்குப் பிறகு நீங்கள் கட்ட வேண்டிய EMI எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ரூ.30 லட்சம்

ரூ.30 லட்சம்

ரூ.30 லட்சம் வீட்டுக்கடன் 20 வருட தவணையில் வாங்கியிருந்தால் இதுவரை நீங்கள் 7.20 சதவிகித வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.23,620 கட்டி இருப்பீர்கள். ஆனால் தற்போது 7.70 சதவிகித வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.24,536 கட்ட வேண்டும். அதாவது கூடுதலாக ரூ.916 கட்ட வேண்டும்.

ரூ.50 லட்சம்

ரூ.50 லட்சம்

அதேபோல் ரூ.50 லட்சம் வீட்டுக்கடன் 20 வருட தவணையில் வாங்கியிருந்தால் இதுவரை நீங்கள் 7.45 சதவிகித வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.40,127 கட்டி இருப்பீர்கள். ஆனால் தற்போது 7.95 சதவிகித வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.41,667 கட்ட வேண்டும். அதாவது கூடுதலாக ரூ.1,540 கட்ட வேண்டும்.

ரூ.80 லட்சம்

ரூ.80 லட்சம்

அதேபோல் ரூ.80 லட்சம் வீட்டுக்கடன் 20 வருட தவணையில் வாங்கியிருந்தால் இதுவரை நீங்கள் 7.55 சதவிகித வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.64,692 கட்டி இருப்பீர்கள். ஆனால் தற்போது 8.05 சதவிகித வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.67,164 கட்ட வேண்டும். அதாவது கூடுதலாக ரூ.2,472 கட்ட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HDFC hikes home loan interest rates by 90 bps in one month: How much your EMI will increase

HDFC hikes home loan interest rates by 90 bps in one month: How much your EMI will increase | HDFC வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறீர்களா? எவ்வளவு அதிகம் கட்ட வேண்டும் தெரியுமா?

Story first published: Saturday, June 11, 2022, 16:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.