நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில், விக்ரம் திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
4 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இம்மாதம் 3-ந் தேதி உலகம் முழுதும் வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது.
கே.ஜி.எப் இரண்டாம் பாகம், அஜீத்தின் வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து இந்தாண்டு அதிக வசூல் ஈட்டியத் தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.