திருவாரூர் மாவட்டத்தில் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் கீழ் இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்துறைபூண்டியை சேர்ந்த நபர் ஒருவர், விஜயகுமார் என்பவரிடம் 16 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று, அதற்கு 80 ஆயிரம் ரூபாய் வட்டியாக செலுத்தியதாக கூறப்படுகிறது.
விஜயகுமார், மேலும் 75 ஆயிரம் ரூபாய் கந்துவட்டி கேட்ட நிலையில், புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் மன்னார்குடியை சேர்ந்த பெண், குடும்பத்தேவைக்காக 50 ஆயிரம் ரூபாயை ஐந்து பைசா வட்டிக்கு பாலமுருகன் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த மாதத்திற்கான வட்டியை அவரால் சரியாக செலுத்த முடியாத நிலையில், பெண்ணின் வீட்டிற்கு சென்ற பாலமுருகன், தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளை காட்டி அவரை மிரட்டியதாக தெரிகிறது. புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.