தாயை வாசலில் காவலுக்கு வைத்துவிட்டு அறைக்குள் வைத்து சிறுமியை பலான பூஜை செய்து கர்ப்பமாக்கிய பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அதே பகுதியில் உள்ள ஊராளி கருப்பு கோவில் பூசாரி பழனி என்ற 65 வயது முதியவரிடம் சிறுமியை அழைத்து சென்று பெற்றோர்கள் குறி கேட்டனர்.
அப்போது சிறப்பு பூஜை செய்து சிறுமியின் வயிற்று வலியை குணப்படுத்துவதாக கூறியுள்ளார் பூசாரி பழனி. இதனை நம்பி பூசாரி பழனியின் வீட்டிற்கு சிறுமியை பெற்றோர் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது சிறுமியின் அம்மாவை வீட்டிற்கு வெளியே அமர்ந்து யாரும் வராமல் பார்த்துக் கொள்ளும் படியும் நான் சிறப்பு பூஜையில் இறங்குகிறேன் என்று கூறிவிட்டு பூசாரி பழனி அறைக்குள் சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.
மேலும் அங்கு அழைத்துச் சென்ற சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி மூன்று மாதம் கர்ப்பம் ஆகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மகளிடம் கேட்ட போது பூசாரியின் பலான பூஜை தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவில் பூசாரி பழனியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.