கர்நாடக மாநிலம் கபினி யானைகள் சரணாலயத்தில் இருந்த போகேஸ்வரா யானை மரணமடைந்தது.
ஆசியாவிலேயே மிக நீண்ட தந்தம் கொண்ட இந்த யானை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போகேஸ்வரா என்று அழைக்கப்படும் ராட்சத தந்தம் கொண்ட இந்த யானை கபினி பகுதியில் சுற்றுலா செல்லும் பலரையும் கவர்ந்து வந்தது.
Kabini’s iconic Bhogeshwara, which had the longest Tusks in the whole of Asia is no more. RIP. pic.twitter.com/Ltnk93j0We
— Susanta Nanda IFS (@susantananda3) June 12, 2022
அதிக மக்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட போகேஸ்வரா யானை கடந்த சில தினங்களாக மக்கள் கண்ணில் படாத நிலையில் குந்தரா வனப்பகுதியில் சடலமாக இருந்ததை வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.