ஆரோக்கியமுள்ள ட்ராகன் பழ ஜூஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
டிராகன் பழம் நறுக்கியது – 1 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் க்யூப்ஸ்
செய்முறை:
முதலில் டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு டிராகன் பழ துண்டுகள், எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு குளிர்ந்த நீர் ஊற்றி மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கியூப்ஸ் சேர்த்தால் டிராகன் ஃபுரூட் ஜூஸ் ரெடி.