ஆளுநர் ஆர்.என்.ரவி இனியும் நமக்கு தேவைதானா? தமிழக முதலமைச்சர் முடிவு செய்ய வேண்டும் – பிரபல கட்சி போர்க்கொடி.!

மதத்தின் பெயரால் சமூக பிளவை ஏற்படுத்த துடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் கண்டிக்கதக்கது என்று, இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன்அஹமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற நாள் முதல், தான் ஆளுநராக இருக்ககூடிய மாநில மக்களின் மனநிலைக்கு எதிராக தொடரந்து கருத்துக்களை தெரிவித்து வருவதோடு, தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நீட், புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவற்றை ஆதரித்து பேசுவதை ஆர்.என்.ரவி வாடிக்கையாக கொண்டுள்ளார். 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் இந்து இஸ்லாமிய மக்கள் சகோதர உணர்வுடன், தொப்புள் கொடி உறவாக பழகி வரும் சூழலில், இந்த உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில், ஆர்.என்.ரவி இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பொதுமேடைகளில் பேசி வருவதை இந்திய தேசிய லீக் வன்மையாக கண்டிக்கிறது.

சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவால் தகர்க்கப்பட்டது இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது மதமோதலை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. 

”சனாதனத்திற்கு ஆதரவாக தனிமனிதன் பேசுவது என்பதில் தவறில்லை. ஆனால் ஒரு மாநில ஆளுநராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளர் போன்றும், பாஜக செய்தி தொடர்பாளர் போல பேசுவதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. தமிழ் மண்ணில் சனாதன உணர்வை வளர்த்து, மத உணர்வைத் தூண்டி, மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவது, அவர் செய்து கொண்ட உறுதிமொழியை மீறும் செயலாகும். 

ஆளுநர் தன்னுடைய வேலையைத் தவிர்த்து பிற வேலைகளைத் தான் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு ஆளுநரின் உரை தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. “உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று அறைக்கூவல் விடுத்தார். “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ” என்ற முழக்கத்தை முன்வைத்து, தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி இனியும் நமக்கு தேவை தானா என்பதை தமிழக முதலமைச்சர் முடிவு செய்ய வேண்டுமென இந்திய தேசிய லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜகிருத்தீன்அஹமது தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.