புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 8,582 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,32,22,017 என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு, உயிரிழந்தோர், குணமடைந்தோர் விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் புதிதாக 8,582 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,32,22,017 .
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உயிரிழப்பு: 4.
இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர்: 5,24,761.
அன்றாட பாசிடிவிட்டி விகிதம்: 2.71%.
வாராந்திர பாசிடிவிட்டி விகிதம்: 2.02%.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து குணமடைந்தோர்: 4435.
இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர்: 4,26,52,743.
நாடு முழுவதும் இதுவரை 195.07 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.