புதுடெல்லி: ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அண்மையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அதிக யுரேனியத்தை வைத்திருப்பதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 30 நாடுகள் ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையில் தீர்மானத்தை இயற்றின. ஈரானை எதிர்த்து 30 நாடுகள் வாக்களித்தன. ஆனால் லிபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் விலகின. அந்த நாடுகளைப் பின்பற்றி இந்தியாவும் தற்போது வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளது.