போலந்தில் நேட்டோ படைகள் கட்டியெழுப்பப்பட்டு வருவதற்கு பதிலடி கொடுப்போம் என ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போலந்தில் நேட்டோ படைகள் கட்டியெழுப்பப்பட்டு வருவதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகமே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட போலந்தில் நேட்டோ படைகளுக்கு பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்று ஐரோப்பாவுடனான ரஷ்ய உறவுகளுக்குப் பொறுப்பான வெளியுறவு அமைச்சகத் துறையின் தலைவர் ஒலெக் தியாப்கின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போர் தாக்குதல் தொடர்ந்து தீவிரமாகும் நிலையில் ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.