உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் 287 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 492-க்கும் அதிமான குழந்தைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஐ.நா.தெரிவித்துள்ளது.