வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர் : ”லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு இந்தியாவே காரணம்,” என, சீன ராணுவ அமைச்சர் வீ பெங்கி கூறினார். தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில், நம் அண்டை நாடான சீனாவின் ராணுவ அமைச்சர் வீ பெங்கி பேசியதாவது:சீனாவை எதிர்ப்பதற்காக, ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது.
அமெரிக்கா தலையீடு
பன்முகத்தன்மை என்ற போர்வையில் தன் நலன்களை நிறைவேற்ற அமெரிக்கா துடிக்கிறது. எந்த ஒரு நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது. இந்தோ – -பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி, எங்கள் பிராந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன், சீனாவிற்கு கடல் சார்ந்த பிரச்னைகள் உள்ளன. இதை நாங்கள் தீர்த்துக் கொள்வோம்; இதில் அமெரிக்காவுக்கு எந்த வேலையும் இல்லை. ‘
ஆக்கிரமிப்பு
சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. நெருங்கிய அண்டை நாடான இந்தியாவுடன் எப்போதும் நட்புடன் இருக்கவே சீனா விரும்கிறது. ஆனால், லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் இந்தியா செயல்படுகிறது. படைகளை இந்தியா குவித்துள்ளதால், லடாக் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement