ஒவ்வொரு சிகரெட்டுகள் மீதும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக கனடா மாற உள்ளது.
கண்டானில் இரண்டு தசாப்தங்களுக்கு முன், மற்ற நாடுகளை போலவே புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் கிராஃபிக் புகைப்பட எச்சரிக்கைகளை உள்ளடக்குவதற்கான ஆணையை நிறைவேற்றியது.
இவ்வாறு புகையிலைப் பொருள்களின் அட்டைகள் மற்றும் கவர்களில் எச்சரிக்கைகளை வெளியிடுவதன் தாக்கம் குறைந்திருக்கலாம், அந்த எச்சரிக்கை செய்திகள் அவற்றின் புதுமையை இழந்திருக்கலாம் என்ற கவலை எழுந்ததால், அதனை நிவர்த்தி செய்ய முடிவு செய்ததாக கனடாவின் மனநலம் மற்றும் அடிமையாதல் அமைச்சர் கரோலின் பென்னட் கூறினார்.
கனடாவில் மதுபானங்களை தொடர்ந்து திருடும் பெண்! புகைப்படங்களுடன் முக்கிய தகவல்
எனவே, ஓவ்வொரு புகையிலைப் பொருட்களின் மீதும் தனித்தனியாக சுகாதார எச்சரிக்கைகளைச் சேர்ப்பதன் மூலம், இந்த அத்தியாவசிய செய்திகள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய உதவும் என்றும், ஒரு சிகரரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்ட தகவல்களைத் தவிர்த்துவிட்டு, சில சூழ்நிலைகளில் ஒரு நேரத்தில் அடிக்கடி சிகரெட்டை புகைக்கும் இளைஞர்கள் உட்பட அனைவருக்கு இந்த செய்து சென்றடையும் என்று கரோலின் பென்னட் கூறினார்.
2023-ன் இரண்டாம் பாதியில் இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய பென்னட், தற்போது “ஒவ்வொரு இழுப்பிலும் விஷம்” (Poison in every puff) என்று முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கனடாவின் இந்த பகுதியில் வசிப்பவரா நீங்கள்? இலங்கை தமிழர் வெளியிட்ட ஒரு தகவல்
இந்த முன்மொழிவை வரவேற்ற, Heart and Stroke Foundation of Canada-வின் CEO Doug Roth, “கனடா இப்போது உலகிலேயே சிகரெட்டுகளுக்கான வலுவான சுகாதார எச்சரிக்கை ஆட்சியைக் கொண்டிருக்கும்” என்று கூறினார்.
இந்த நடவடிக்கைகள் இளைஞர்கள் மற்றும் புகைப்பிடிக்காதவர்களுக்கு அவர்களின் ஈர்ப்பை மேலும் குறைக்க உதவும், அத்துடன் தற்போதைய புகைப்பிடிப்பவர்களை விட்டு வெளியேறுவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
Statistics Canada-வின் படி, 2020-ல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர்.