புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் ஒரு மித்த வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சிகளுடன் பேசுவதற்கு பா.ஜ., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான உடன் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஒரு மித்த வேட்பாளரை தேர்வு செய்ய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் மாநில கட்சிகளுடன் பேசுவதற்கு பா.ஜ., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Advertisement