கனடாவில் உள்ள மதுக்கடைகளில் இருந்து ஆயிரக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள மதுவை திருடிய பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஹாலிபக்ஸில் உள்ள பல மதுபான கடைகளில் இருந்து மதுபானங்கள் திருடு போயுள்ளன.
இது தொடர்பான முதல் புகார் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி பொலிசாருக்கு வந்தது.
அதன்படி பெண்ணொருவர் மதுபானங்களை பெரிய பையில் போட்டு கொண்டு பணம் கொடுக்காமல் சென்றிருக்கிறார்.
இது போன்ற புகார்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவண்ணம் இருந்தது.
RCMP
சில தினங்களுக்கு முன்னர் வரை மதுபான திருட்டு புகார் வந்தது. திருடப்பட்ட மதுபானங்களின் மொத்த விலைகள் ஆயிரக்கணக்கான டொலர்களை தாண்டும்.
சிசிடிவி கேமரா படங்களை ஆய்வு செய்த பிறகு ஒரே பெண் தான் அனைத்து திருட்டுக்குக்கும் காரணமானவர் என்று பொலிசார் நம்புகிறார்கள்.
அந்த பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார் அவர் குறித்து யாருக்காவது அடையாளம் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
RCMP