காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. இருப்பினும் மருத்துவமனையில் கண்காணிப்புக்காக தங்கியிருப்பார். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அக்கறைக்கு, வாழ்த்துகளுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஜூன் 2ஆம் தேதி சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து பிரியங்கா காந்திக்கு தொற்று உறுதியானது. சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகளே இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு தற்போது சற்று அதிகமாக உபாதைகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.