மதுரை மாநகருக்கு உட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் (ஏட்டு) ஒருவருக்கும், அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவருக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று இரண்டு பேரும் பணியில் இருந்துள்ளனர். அப்போது காவல் நிலையம் இருந்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட போலீசார் அனைவரும் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட ஏட்டய்யாவும், அந்த பெண் காவலரும் உடை மாற்றும் அறையில் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களின் இந்த காதல் லீலைகள் குறித்த தகவல்கள் வெளியாகியதால் இரண்டு பேருமே மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது காவல் நிலையத்தில் எத்தனை பேர் பணியில் இருந்தனர்?
குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் உண்மையிலேயே காதல் லீலைகள் செய்தார்களா?
காவல் நிலையத்திற்கு வந்து நீண்ட நேரமாக காத்திருந்ததாக சொல்லப்படும் அந்த நபர்கள் யார்?
காதல் லீலை செய்ததாக சொல்லப்படும் இரண்டு காவலர்களையும் கையும் களவுமாக பிடித்த காவலர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை தற்போது நடந்து வருகிறது.
மேலும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் பதிவுகளையும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தெரிவிக்கையில், காவல் நிலையத்தில் அப்படி ஒரு நிகழ்வு உண்மையாகவே நடந்ததா? என்பது தெரியவில்லை. அது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.