தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
“இவர்கள் மூவர் உள்ளூர்வாசிகள். லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாத சதிச் செயல்களில் ஈடுபட்டுவந்தனர்.
கடந்த மே 13 ஆம் தேதி, ரியாஸ் அகமது என்ற காவலரை சுட்டுக் கொன்றதில் இவர்களில் ஜுனைத் ஷீர்கோர்ஜி என்பவருக்கு தொடர்பு இருந்தது.
இவரைத் தவிர ஃபாசில் நாசிர் பட், அகமது மாலிக் ஆகிய இருவரும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களாவர். அவர்களிடமிருந்து 2 ஏகே 47 ரைபில்ஸ், 1 பிஸ்டல் ஆகியன கைப்பற்றப்பட்டன” என்று காவல்துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்தார்.