சேலம் அருகே, குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். கீர்த்திராஜ் – தனு ஸ்ரீ தம்பதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தாய் வீட்டுக்கு சென்ற தனஸ்ரீயை சமாதானப்படுத்தி நேற்று முன்தினம் கீர்த்திராஜ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அன்றிரவே, தனுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். தனுஸ்ரீயின் தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்ததால், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
விசாரணையில், கீர்த்தி ராஜ் தனுஸ்ரீயை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்ததும், சடலத்தை தூக்கில் மாட்டிவிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடியதும் அம்பலமானது.