தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி,
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம், 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும்.
புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார்,
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக உள்ளது. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,033 எம்எல்ஏக்கள் என மொத்தமாக 4,809 பேர் வாக்களிப்பார்கள்.
குடியரசு தேர்தலில் தமிழகத்தில் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகவும், ஒரு எம்பி.,யின் வாக்கு மதிப்பு 700 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 76 ஆயிரத்து 378 ஆகும். இதில்,
திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு 62 ஆயிரத்து 984 வாக்குகள் உள்ளன. திமுகவின் 133 எம்எல்ஏக்கள், 34 எம்பிக்கள் வாக்குகளின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 208.
தமிழக சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் 66 சட்டமன்ற உறுப்பினர்களும், ஆறு எம்பிகளும் உள்ளனர். மொத்த வாக்குகளின் மதிப்பு 15 ஆயிரத்து 116 ஆக உள்ளது.
18 எம்எல்ஏக்கள், எட்டு எம்பிக்களை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 9 ஆயிரத்து 468 வாக்குகள் உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 1508 வாக்குகள் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 700 வாக்குகள் உள்ளது.