சத்தமேயில்லாமல் ரூ.150 கட்டண அதிகரிப்பு.. ஜியோ வாடிக்கையாளர்கள் டென்ஷன்..!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் ப்ரீபெய்டு திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை செய்துள்ளது.

அதென்ன ஒரு திட்டத்திற்கு மட்டும் விலை அதிகரிப்பு? ஏன் இந்த மாற்றம்? இதனால் யாருக்கு பாதிப்பு?

அதோடு ஒரே திட்டத்திற்கு ஒரேடியாக 150 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதா? அப்படி என்ன திட்டம்? வாருங்கள் பார்க்கலாம்.

கூகுள் பே, போன்பே போன்ற UPI சேவையை பயன்படுத்துபவரா நீங்க.. இந்த 5 விஷயங்களை சரியா செய்ங்க!

ரூ.749 திட்டம்

ரூ.749 திட்டம்

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கான இந்த திட்டத்தில் தான் தற்போது 150 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 749 ரூபாயாக இருந்த திட்டம், 899 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு திட்டத்தில் விலை அதிகரிப்பு என்பது இருந்தாலே, கூடுதலாக ஏதேனும் சலுகைகளையும் நிறுவனங்கள் அறிவிக்கும். அப்படி எதுவும் அறிவித்து இருக்கிறதா?

என்னென்ன கிடைக்கும்?

என்னென்ன கிடைக்கும்?

ஜியோ என்றாலே சலுகை. மலிவு கட்டணம் என பல சலுகைகள் இருக்கும். ஆனால் தற்போதும் கூட இந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தில் வழக்கம்போல 24 ஜிபி டேட்டா, 336 நாட்கள் வேலிடிட்டி. அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை. 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா. 28 நாட்களுக்கு 50 எஸ் எம் எஸ் என எதுவும் மாற்றாம் காணவில்லை.

இன்னொரு கட்டண அதிகரிப்பு வரலாம்
 

இன்னொரு கட்டண அதிகரிப்பு வரலாம்

நவம்பர் 2021ல் இருந்தே கட்டணங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. டெலிகாம் ஆப்ரேட்டர் தொடர்ந்து அதன் அனைத்து கட்டண டாரிப்களையும் மாற்றியமைத்துள்ளது.

ஜியோ மட்டும் அல்ல, ஏர்டெல், வோடபோன் நிறுவனம் என அனைத்தும் கட்டண அதிகரிப்பினை செய்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தற்போது கூடுதல் செலவிடும் நிலைக்க்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் இன்னொரு விலையேற்ற்றம் என்பது வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் அதிருப்தி

வாடிக்கையாளர்கள் அதிருப்தி

மலிவான விலையில் அனைத்து தரப்பினரும் பலடையும் விதமாக கொண்டு வரப்பட்ட ஜியோபோனுக்கு, தற்போது ரீசார்ஜ் சேவையானது அதிகரித்துள்ளது ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Jio hikes price of this prepaid plan by Rs150: check latest updates here

Reliance Jio has made a huge change in its prepaid plan. The plan has been increased from Rs. 749 to Rs. 899.

Story first published: Sunday, June 12, 2022, 16:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.